Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டார்ஜிலிங்கில் அமைதியை ஏற்படுத்த மேற்குவங்க முதலமைச்சர் அழைப்பு

In இந்தியா
Published: 04:50 GMT, Jul 9, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Elakkiya

மேற்கு வங்கத்தின் அமைதியான மலை நகரமான டார்ஜிலிங்கில் தனிமாநிலம் கோரி கடந்த ஒரு மாதமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்ற நிலையில் அமைதியான சூழலை உருவாக்க ஒத்துழைக்குமாறு மாநில முதலமைச்சர் மம்தா பான்ர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

மாநில செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மம்தா பானர்ஜி மேற்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது, பிராந்திய குழுக்களால் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் காரணமாக கல்லூரிகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் படிக்க முடிவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூர் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே வன்முறையை கைவிட்டால் மாத்திரமே அமைதியை மீட்டெடுக்கவும் பேச்சுக்களை நடத்தவும் முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ வன்முறையிலிருந்து சமாதான பாதைக்கு திரும்பி வாருங்கள். அரசாங்கம் உணவுகளை அனுப்புவதற்கு அனுமதியுங்கள். கோர்காலான்ட் பிராந்திய நிர்வாகத்தினால் நிறைவேற்ற முடியாத மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் வழங்கட்டும். மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு அனுமதியுங்கள். இது என்னுடைய வேண்டுகோள்’ என்று தெரிவித்துள்ளார்.

டார்ஜிலிங்கிற்கான அரை தன்னாட்சி நிர்வாக அமைப்பான கோர்காலான்ட் பிராந்திய நிர்வாக அரசியல் கட்சியான GJM ஆதரவாளர்களால் மேற்படி ஆர்ப்பாட்டங்களும் வன்முறை சம்பவங்களும் இடம்பெற்று வருகின்ற நிலையில் முதலமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg