Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்மேற்கு ஜப்பானில் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்

In உலகம்
Published: 04:37 GMT, Jul 9, 2017 |
0 Comments
1351
icon_com
This post was written by : Sylviya

தென்மேற்கு ஜப்பானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுத்திகரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட குறித்த வெள்ளத்தால், பொதுமக்கள் பலர் காணாமல் போயுள்ள நிலையில் பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் அவர்களை தொடர்ந்தும் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகள் மற்றும் சகதிகளை சுத்திகரிக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த பகுதிகளில் சரிந்த நிலையில் உள்ள பாரிய மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ள பாரிய உபகரணங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg