Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீயணைக்கத் தேவையான உபகரணங்கள் காணப்படவில்லை!

In
Published: 07:54 GMT, Jul 9, 2017 |
0 Comments
1318
icon_com
This post was written by : Sylviya
08

கிரென்பெல் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தீயை அணைப்பதற்கு தேவையான உபகரணங்கள் காணப்படவில்லை எனவும் அதனால் தீயணைப்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாகவும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தை கையாண்டமை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த தீயணைப்பு வீரர்கள் சிலர், குறைவான நீர் அழுத்தம் மற்றும் தகுந்த உபகரணங்கள் இன்மை ஆகியன தீ பரவிச் செல்வதை தடுப்பதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தன என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஏற்பட்ட குறித்த விபத்தில் சிக்கி, சுமார் 79 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த அடுக்குமாடி கட்டடத்தில் பூசப்பட்டிருந்த உலோகப்பூச்சு எளிதில் தீப்பிடித்து எரியக்கூடியதாக காணப்பட்டமையே இந்த தீ விபத்து ஏற்படக் காரணம் என அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg