Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விநியோகிக்காமல் வீசப்படும் பெறுமதிவாய்ந்த புத்தகங்கள்

In இலங்கை
Updated: 10:30 GMT, Jul 9, 2017 | Published: 10:10 GMT, Jul 9, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
books (3)

பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்தக் கூடிய ஒரு தொகை பாடநூல்களும் கையேடுகளும் நுவரெலியாக வலயக் கல்வி காரியாலயத்திற்கு அருகிலுள்ள வாகன கராஜில் தேங்கிக்கிடப்பதாக தெரியவருகின்றது.

அனைத்து மொழி மூலமான மாணவர்களும் கல்வி கற்கக்கூடிய பாட புத்தகங்களோடு, ஆசிரியர்களுக்கான பாட கைநூல்களும் இதில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான மலையக பாடசாலைகளில் பாடப் புத்தகங்கள் குறைபாடு காணப்படுகின்ற போதும், கல்வி அமைச்சினால் விநியோகிக்கப்படும் பாடப்புத்தகங்களை பாடசாலைகளுக்கு வலயக் கல்வி பனிமனைகள் முறையாக விநியோகிப்பதில்லையென தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் வெளிச்சத்திற்கு வராத காரணத்தினால் பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இவ்வாறு விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் பெறுமதி வாய்ந்த நூல்களை தோட்டப்புற மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அத்தோடு, கல்வியமைச்சினால் விநியோகிக்கப்படும் பாடப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் பாடசாலைகளுக்கு ஒழுங்காக விநியோகிக்கப்படுகின்றதாக என்பது தொடர்பாகவும் கண்காணிக்கப்படுவது அவசியமென மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

books (4) books (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg