Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயம் விஞ்ஞானக் கல்லூரியாக தரம் உயர்வு!

In இலங்கை
Published: 10:41 GMT, Jul 9, 2017 |
0 Comments
1255
icon_com
This post was written by : Ravivarman
04

நுவரெலியா ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயம் விஞ்ஞானக் கல்லூரியாக தற்போது தரம் உயர்த்தபட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னனியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணனின் முயற்சியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய மலையகத்தில், 25 பாடசாலைகள் கணித விஞ்ஞான பாடசாலைகளாக தரம் உயர்த்தி அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்திற்குள் இந்த பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையை ஒரு உயர்தர கணித விஞ்ஞான பாடசாலையாக தரம் உயர்த்தபட்டமை தொடர்பில் பாடசாலையின் உயர்தர தொழில்நுட்ப மாணவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“எங்களுக்கு உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவில் கல்வி பயில தகமையிருக்கின்றது விருப்பமும் இருக்கின்றது. இருந்தும் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் எமது பாடசாலையில் இன்மையால் தற்போது நாங்கள் தொழில்நுட்ப பாடங்களை கற்று வருகின்றோம்.

நாங்கள் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகளில் படிப்பது என்றால் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். அதற்கான வசதிகள் எமது பெற்றோரிடம் இல்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமது பாடசாலையை ஒரு கணித விஞ்ஞான பாடசாலையாக தரம் உயர்த்தி தேவையான வளங்களை பெற்றுக் கொடுத்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்”  என குறித்த மாணவர் மேலும் தெரிவித்தார்.

10 09 7 01

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg