Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடமுருட்டிக் குளத்தில் நீரில்லை!

In இலங்கை
Published: 11:39 GMT, Jul 9, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
pond

கிளிநொச்சி பூநகரி குடமுருட்டிக் குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதால், குறித்த குளத்தின் கீழுள்ள 321 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை அழிவடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

குடமுருட்டிக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கராயன் குளத்திலிருந்து நீரைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டது. எனினும், அக்கராயன் குளத்தின் நீரானது அதன் கீழான பயிர்ச்செய்கைக்கே போதுமானதாக உள்ளதால் குடகுருட்டிக் குளத்திற்கு நீரை வழங்க முடியவில்லை.

இந்நிலையில், குடமுருட்டிக் குளத்தின் கீழான நெற்செய்கை அழிவடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதோடு, மழைவீழ்ச்சியே இப் பயிர்செய்கையை அழிவிலிருந்து காக்கும் ஒரே வழியாக காணப்படுகிறது.

வடக்கில் கடந்த இரண்டு மாத காலமாக கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மழை பெய்தது. இந்நிலையல், எதிர்வரும் நாட்களில் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் மழை பெய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg