Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றும் சிரமதானம்

In இலங்கை
Updated: 12:32 GMT, Jul 9, 2017 | Published: 12:31 GMT, Jul 9, 2017 |
0 Comments
1257
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
illam-275x194

மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது நாளாகவும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் போராட்டத்தில் வீரச் சாவடைந்தவர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்கள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் படைதரப்பால் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட துயிலும் இல்லங்களில் ஒன்றான மன்னார், மடு, பெரிய பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் கிராம மக்களும், முன்னாள் போராளிகளும், மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து சிரமதானப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் பற்றைக் காடுகளாக மாறிய வடக்கு கிழக்கின் பல மாவீரர் துயிலும் இல்லங்கள், அண்மைய நாட்களாக துப்பரவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg