Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கூட்டமைப்பு அனைத்து முஸ்லிம்களுக்குமானது: பசீர் சேகுதாவூத்

In இலங்கை
Published: 13:57 GMT, Jul 9, 2017 |
0 Comments
1298
icon_com
This post was written by : Ravivarman
Basheer - 001

கிழக்கு மாகாணத்துக்குரிய முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கூட்டமைப்பு என்பது, இலங்கை முழுவதிலும் வாழுகின்ற முஸ்லிம்களுக்கான ஒரு கூட்டாக அமையும் என, முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்படுபவருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

முஸ்லிம் கூட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று, முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் எம்.ரி. ஹசனலியின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள்தான் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர். ஆனாலும், அந்த மூன்றில் ஒரு பங்கினருக்குத்தான் அரசியல் அடர்த்தியும் திடகாத்திரமும் உள்ளது.

முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. மஹிந்தவை தோற்கடித்தால்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக இருக்கலாம் என்பதற்காகத்தான், முஸ்லிம்கள் நல்லாட்சியைக் கொண்டுவந்தார்கள். ஆனால், இப்போது முஸ்லிம்களின் பிரச்சினை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.

முஸ்லிம் கூட்டமைப்பு உருவாகி, அது – கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அங்கீகாரத்தினைப் பெறும்போது, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் குரல்தான், அகில இலங்கை முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கும்” என பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg