Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் உதவி தேவைப்படும் சிறுவர்களின் குடும்பங்களில் இருந்து விண்ணப்பம் கோரல்!

In இலங்கை
Published: 15:47 GMT, Jul 9, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Ravivarman
ee

கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவதியுறும் சிறுவர்களுக்கு தொடர்ச்சியாக உதவியளிக்கும் செயற்றிட்டம் ஒன்றை CDL (children development lanka) எனும் தொண்டு நிறுவனம் வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்திட்டத்தினை மேலும் விரிவாக்கும் முகமாக மேற்படி உதவி தேவைப்படும் மேலதிக சிறுவர்களை இணைக்க ஆயத்தமாக உள்ளதாக நிறுவன இயக்குனர் பூர்னிமா மேதவி தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் பெற்றோர்கள் தமது விண்ணப்பக் கடிதங்களை தங்கள் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தலுடன் 395/99 யோஷவாஸ் வீதி, இறம்பைக்குளம் வவுனியாவில் அமைந்துள்ள CDL வவுனியா மாவட்ட அலுவலகத்தில் கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பங்கள் அனைத்தும் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் குறித்த பிரதேச செயலர்களின் ஆலோசனையின் பெயரில் தேவைகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் உதவி அவசியமான சிறுவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இதனோடு பயன்பெற விரும்பும் பெற்றோர்/ பாதுகாவலர் இத்திட்டங்கள் தொடர்பான மேலதிக விபரங்களை 0765653974 என்னும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg