Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜி-20 உச்சி மாநாட்டில் தீவிரவாதத்துக்கு எதிராக செயற்பட தீர்மானம்!

In இலங்கை
Published: 16:45 GMT, Jul 9, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Ravivarman
Daily_News_291668176652

உலகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒத்துழைப்புடன் செயல்படுவது என்று ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் நடைபெற்றுவரும் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜி-20 நாடுகள் சார்பில் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகள் சில இணைந்து கட்டாருக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டினை ஜி- 20 நாடுகளின் தீர்மானம் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தீர்மானத்தின் மூலம் ஜி-20 உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு விடயங்களில் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டுமெனவும்,தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த நடவடிக்கைகளை ஒற்றுமையுடன் முன்னெடுப்பது குறித்தும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg