Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வை.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவராக மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவு

In இந்தியா
Updated: 08:09 GMT, Jul 10, 2017 | Published: 03:48 GMT, Jul 10, 2017 |
0 Comments
1180
This post was written by : Kemasiya

வை.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

வை.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். குறித்த கூட்டத்தில் கட்சி தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து வாக்கெடுப்பின் பிரகாரம் கட்சியின் தலைவராக மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை தேர்தல் அலுவலர் உம்மாரெட்டி வெங்கடேஸ்வரலு அறிவித்தார். குறித்த வாக்கெடுப்பிற்கு 20பேர் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். அந்த 20 விண்ணப்பங்களிலும் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரே குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனையடுத்து 3ஆவது முறையாகவும் கட்சியின் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg