Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரி-ருவென்ரி சம்பியன் நாங்களே-இந்தியாவிற்கு நிரூபித்தது மேற்கிந்திய தீவுகள்

In கிாிக்கட்
Updated: 04:13 GMT, Jul 10, 2017 | Published: 04:12 GMT, Jul 10, 2017 |
0 Comments
1667
icon_com
This post was written by : Anojkiyan
elv

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரேயொரு ரி-ருவென்ரி போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜமைக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக தினேஷ் கார்த்திக் 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டெய்லர் மற்றும் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து 191 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் வெறும் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இப்போட்டியில் அதிரடி காட்டிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான எவின் லீவிஸ் அதிகபட்ச ஓட்டமாக ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி, ரி-ருவென்ரியில் இந்தியாவிற்கு பதிலடி கொடுத்துள்ளது. இப்போட்டியில் 62 பந்துகளில் 12 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட எவின் லீவிஸ் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg