Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேண்டுமென்றே இடையூறு செய்த இந்திய வீராங்கனை-தங்க பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை

In விளையாட்டு
Published: 06:28 GMT, Jul 10, 2017 |
0 Comments
2871
icon_com
This post was written by : Anojkiyan
gay

ஆசிய தடகளத்தில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில், வேண்டுமென்றே இந்திய வீராங்கனை இடையூறு செய்ததால் அவரது தங்க பதக்கம், இரண்டாம் இடம்பெற்ற இலங்கை வீராங்கனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில், இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் 2 நிமிடம் 2 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இரண்டாவது இடத்தை இலங்கை வீராங்கனை நிமாலி வாலிவர்ஷாவும் (2 நிமிடம் 05.23 வினாடி), மூன்றாவது இடத்தை கயந்திகாவும் (2 நிமிடம் 05.27 வினாடி) பெற்றுக்கொண்டனர்.

ஆனால் இலக்கை நோக்கி ஓடிய போது, தாங்கள் முந்தக்கூடாது என்பதற்காக அர்ச்சனா வேண்டுமென்றே வழியைமறித்து இடையூறு செய்தார் என்று இலங்கை வீராங்கனைகள் புகார் கூறினர். இதையடுத்து ஆசிய தடகள போட்டி ஒருங்கிணைப்பு குழு கணொளி காட்சிகளை ஆய்வு செய்தது.

இதில் இலங்கை வீராங்கனைகளின் புகாரில் உண்மை இருப்பதாக கருதிய குழு அர்ச்சனாவை தகுதி நீக்கம் செய்து பதக்கத்தை பறித்தது. தங்கப்பதக்கம் நிமாலிக்கும், வெள்ளிப்பதக்கம் கயந்திகாவுக்கும் வழங்கப்பட்டது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg