Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு உக்ரைனின் நெருக்கடியை தீர்க்க ஐ.நா. ஆதரவு

In உலகம்
Published: 06:41 GMT, Jul 10, 2017 |
0 Comments
1241
icon_com
This post was written by : Risha

நாட்டின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு உக்ரைன், ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை எதிர்பார்க்கலாம் என ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

கீவ்விற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. செயலாளர், அங்கு உக்ரைன் ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த ஐ.நா. செயலாளர், ”உக்ரைனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுவரும் நெருக்கடி தொடர்பில் ஐ.நா. தொடர்ந்து அவதானித்து வருகிறது. அதன்படி உக்ரைனுக்கு அனைத்து விதத்திலும் உதவிகளை வழங்க ஐ.நா. தயாராக உள்ளது.

உக்ரைனுக்கான உதவிகளை வழங்குவது என்பது எமது; நிகழ்ச்சி நிரலில் காணப்படும் ஒரு விடயமாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg