Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனைவி அனுமதித்தால் டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக்கொள்வேன்: ரோஜர் பெடரர்

In டெனிஸ்
Updated: 06:47 GMT, Jul 10, 2017 | Published: 06:46 GMT, Jul 10, 2017 |
0 Comments
1230
icon_com
This post was written by : Anojkiyan
aan

என் மனைவி சொன்னால் அந்த கணமே எனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக்கொள்வேன் என சுவிஸ்சர்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கூறுகையில், ‘எனது மனைவி மிர்கா தான் எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக இருக்கிறார். அவர் இல்லாவிட்டால் நான் இந்த அளவுக்கு சாதித்து இருக்க முடியாது.

‘இதற்கு மேலும் உங்களுடன் சேர்ந்து டென்னிஸ் பயணத்தை தொடர விரும்பவில்லை’ என்று அவர் எப்போது சொல்கிறாரோ, அந்த கணமே எனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று சொல்லி விடுவேன். அவ்வளவு தான்’ என கூறினார்.

இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள 35 வயதான ரோஜர் பெடரர், நடப்பு ஆண்டில் அவுஸ்ரேலிய ஓபன் மற்றும் இந்திய வெல்ஸ் மற்றும் மியாமியில் அடுத்தடுத்த பட்டங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg