Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராஜதந்திர ரீதியிலான பிளவு: இழப்பீடு கோரும் கட்டார்

In உலகம்
Published: 07:32 GMT, Jul 10, 2017 |
0 Comments
1194
icon_com
This post was written by : Risha

கட்டார் மீது சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளினால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியை தொடர்ந்து ஏற்பட்ட இழப்பீடுகளை சட்டத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கட்டார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கட்டார் மீதான நெருக்கடியினால் ஏற்பட்ட சேதங்களின் இழப்பீடுகளை ஆய்வு செய்வதற்கென குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளின் இராஜதந்திர ரீதியிலான பிளவு காரணமாக கட்டார் எயர்வேஸ் உள்ளிட்ட பாரிய நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன.

இந்நிலையில், இந்த குழுவானது வளைகுடா நாடுகளிடையிலான நெருக்கடியினால் அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்நோக்கும் இழப்பீடுகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக கட்டார் அரச வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டார் முற்றுகை காரணமாக சவுதி அரேபியா உள்ளிட்ட குறித்த நாடுகளில் கல்வி பயிலும் கட்டார் மாணவர்களும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கட்டார் பயங்கரவாதத்திற்கு துணை போவதாக தெரிவித்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை கடந்த ஜூன் மாதத்துடன் முறித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg