Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரி-ருவென்ரி கிரிக்கெட் அரங்கில் இரட்டை சதமடித்து ஆப்கான் வீரர் சாதனை

In கிாிக்கட்
Updated: 08:58 GMT, Jul 10, 2017 | Published: 08:57 GMT, Jul 10, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Anojkiyan
sad

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஷபீகுல்லா ஷபாக், ரி-ருவென்ரி கிரிக்கெட் அரங்கில் இரட்டை சதமடித்து புதிய உலகசாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சபாகின் அணிக்கெதிரான போட்டியில், கடீஜ் அணி சார்பில் வினையாடிய ஷபீகுல்லா ஷபாக், 71 பந்துகளில் 21 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடங்களாக 214 ஓட்டங்களை குவித்தார்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கடீஜ் அணி, ஷபாக்கின் இரட்டை சத உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 351 ஓட்டங்களை குவித்தது.

இதனைதொடர்ந்து களமிறங்கிய சபாகின் அணி, கடீஜ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கடீஜ் அணி அபார வெற்றிபெற்று சரித்திரத்தில் இடம்பிடித்தது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg