Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லைக்கா தயாரிப்பில் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி -2

In சினிமா
Updated: 09:00 GMT, Jul 10, 2017 | Published: 08:59 GMT, Jul 10, 2017 |
0 Comments
1243
This post was written by : elayathambi

சிம்பு தேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்த வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி வெளியாகி நேற்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இத் திரைப்படத்தின் தயாரிப்பாளரான சங்கர் இது குறித்து தனது ட்விட்டரில் நேற்று பதிவிட்டுள்ளார்.

எந்திரன் திரைப்படத்தின் அடுத்த தொடராகக் கூறப்படும்  2.ஓ திரைப்படத்தை லைக்கா தயாரிப்பில் இயக்கி வரும் சங்கர், 23 ஆம் புலிகேசியின் தொடர்ச்சிப் படம் ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறார்.

நேற்றைய சங்கரின் ட்விட்டர் பதிவில்,  இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் தொடரை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக கூறியுள்ளார். இதனை லைக்கா புரடக்ஷனுடன் இணைந்து தயாரிக்க இருப்பதாக சங்கர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சிம்பு தேவனே இயக்க இருக்கிறாரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg