Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோட்டர் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 09:16 GMT, Jul 10, 2017 | Published: 09:16 GMT, Jul 10, 2017 |
0 Comments
1313
This post was written by : Ravivarman

பொரலந்த கெப்பெட்டிபொல பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரலந்த நகரத்தை அண்மித்த பகுதியில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்தில் றாகம இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் வெலிமடை வங்கியகும்புர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொரலந்த பிரதேச வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஹகும்புர மற்றும் வெலிமடை பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

IMG-20170710-WA0020

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg