Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டில் மீண்டும் அடை மழை: அனர்த்தம் ஏற்படும் அபாயம்

In இலங்கை
Published: 09:46 GMT, Jul 10, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
sl-rain

நாட்டின் தெற்கு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக, பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக குக்குலே கங்கையின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு, அருகிலுள்ள நகரங்களில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

அத்தோடு, அகலவத்தை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் அப்பகுதி மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்தோடு, நாட்டின் தெற்கு, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மகாணங்களில் இன்று இடைக்கிடை மழை பெய்வதோடு, காற்றும் பலமாக வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg