Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைத்து மாநில செயலாளர்களையும் இன்று சந்திக்கின்றார் மோடி

In இந்தியா
Updated: 10:34 GMT, Jul 10, 2017 | Published: 10:32 GMT, Jul 10, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Kemasiya
pm

அனைத்து மாநில தலமை செயலாளர்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்ற சந்தித்து பேசுகின்றார். பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின்னர், அனைத்து மாநிலத்தினதும் தலமைச் செயலாளர்களை  ஒரே மேடையில் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.

குறித்த சந்திப்பு டில்லியில் இடம்பெறுகின்றது. இந்த சந்திப்பின் பொழுது பணப்பரிவர்த்தனை, மானியங்களை நேரடியாக வழங்குவது, விவசாயம், ஊட்டச்சத்து, மேலாண்மை ஆகியவற்றின் மேம்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 30 மாநிலங்களின் யூனியன் பிரதேச தலமைச் செயலாளர்கள் மற்றும் நிதி, சுகாதார, வேளாண்மை, தொழில்துறை  திட்டச் செயலாளர்களும் இதில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கூட்டத்தில் மத்திய மாநில அரசு இணைந்து மாநிலங்களின் வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் வென்றவர்களை ஊக்குவிப்பது, மின்சார கார்களின் பயன்பாடு, குடிநீர், கழிவு நீர், மேலாண்மை குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg