Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதினேழு அணு உலைகளை மூட பிரானஸ் தீர்மானம்

In ஐரோப்பா
Updated: 11:38 GMT, Jul 10, 2017 | Published: 11:38 GMT, Jul 10, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Risha
nucl

பிரான்ஸ், எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவில் அதன் 17 அணு உலைகளை மூட எதிர்பார்த்துள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் சமூக மாற்றத்திற்கான அமைச்சர் நிக்கோலாஸ் ஹலோட் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஊடகமொன்றுக்கு அவர் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மின்சக்தியில் அணுக்கருவியின் பங்கை குறைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மின்சார உற்பத்தியில் அணு மின்சக்தியை 50 சதவிகிதம்வரை குறைப்பதை இலக்காகக் கொண்டு இந்த அணுகுமுறை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த இலக்கை எட்டுவதற்கு சில அணு உலைகளை மூடுவது அவசியமாகும். அந்தவகையிலேயே முதற்கட்டமாக 17 அணு உலைகளை மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg