Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை நடவடிக்கை: தமிழிசை தெரிவிப்பு

In இந்தியா
Published: 11:36 GMT, Jul 10, 2017 |
0 Comments
1263
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

இலங்கை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 42 படகுகளை, எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் படகுகள் தொடர்பான அறிக்கையொன்றை, தனது இலங்கை விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சின் சட்டக் குழுவிடம் கையளித்ததாகவும், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தான் சந்தித்த பின்னர், குறித்த அறிக்கை தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தமிழிசை மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழக மீனவர்களின் படகுகள் தொடர்பான விபரத்தை கையளிக்குமாறு, தமது அமைச்சின் சட்டக் குழுவிற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க பணிப்புரை விடுத்ததாகவும் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg