Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழங்குடியின மக்களுக்கு உதவ முன்வந்துள்ள சுகாதாரத் திணைக்களம்!

In கனடா
Published: 11:55 GMT, Jul 10, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Anojkiyan
can

ஒன்ராறியோவின் வட பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின மக்கள் மத்தியில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், அவர்களுக்கு உதவ கனேடிய சுகாதாரத் திணைக்களம் முன்வந்துள்ளது.

பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பழங்குடியின குடும்பங்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக கனேடிய சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த குடியிருப்பு பகுதிகளுக்கு தமது மருத்துவ உத்தியோகத்தர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டில் இதுவரையில் ஒன்ராறியோவின் வட பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின மக்கள் மத்தியில் 18 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிபரமொன்று தெரிவிக்கின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg