Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்க அதிபரை இடமாற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Published: 12:04 GMT, Jul 10, 2017 |
0 Comments
1252
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
batti protest (2)

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றுமாறும், வாகரை மற்றும் செங்கலடி ஆகிய இரு பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறும் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வாகரை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

வாகரை மற்றும் செங்கலடி ஆகிய இரு பிரதேச செயலாளர்கள், உடனடியாக அமுலுக்குவரும் வகையில் உள்ளாட்டு அமைச்சினால் கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அரசாங்க அதிபரை இடமாற்றுமாறும் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்தை நிறுத்து’, ‘ஊழல் செய்யும் அதிகாரியின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவது யார்?’, ‘நல்லாட்சி அரசாங்கம் ஊழலுக்கு சார்பானதா?’ உள்ளிட்ட வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், கே.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாசிலாமணி ஆகியோர் இப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றை கையளித்துவிட்டு கலைந்து சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg