Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குற்றச்சாட்டை நிரூபித்தால் அதற்கும் பதில் சொல்ல தயார்: மட்டு அரசாங்க அதிபர்

In இலங்கை
Published: 14:00 GMT, Jul 10, 2017 |
0 Comments
1375
icon_com
This post was written by : Ravivarman

ஊழல் குறித்த குற்றச்சாட்டை கூறுபவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றபோது அதற்கும் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்க அதிபர் என்பவர், அரசாங்கத்தினால் அரச கடமைகளையாற்றுவதற்காக நியமனம் செய்யப்படுகின்ற ஒரு அதிகாரி. எனவே அரசு எனக்கு கையளித்த கடமைகளை மட்டும் செய்வதற்கு வரையறுக்கப்பட்ட எனது அதிகார வரம்பிற்குள் என்னால் செயற்படமுடியும். பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்திற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதை இந்த இடமாற்றம் வந்தநாளில் இருந்து தெரிவித்து வந்துள்ளேன்.

இந்த மாவட்டங்களுக்கு வருகின்ற அத்தனை நிதி ஒதுக்கீடுகளும், அதனுடைய செயற்பாடுகளும் பிரதேச செயலகங்களினால்தான் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே மாவட்ட செயலகத்தினால் இந்த செயற்பாடுகள் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை அதற்கான நிதி ஒதுக்கீடுகள் நேரடியாக பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டு பிரதேச செயலகங்களினால் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கடந்த 5 வருடங்களிலே நாங்கள் இந்த மாவட்டத்திற்கு செய்த அபிவிருத்தியை பட்டியல்போட்டு சொல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் இதிலே ஊழல் நடைபெற்றது என அவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றபோது அதற்கும் பதில் சொல்ல தயாராக இருக்கின்றோம்” என மட்டக்களப்பு மாவட்டஅரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg