Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைமை பயிற்சியாளர் குறித்து ஆலோசனை தேவை: கங்குலி

In கிாிக்கட்
Updated: 06:12 GMT, Jul 11, 2017 | Published: 04:28 GMT, Jul 11, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
BCCI Cricket Advisory Committee Press Confernce

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி யாருக்கு என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ள நிலையில், அணித்தலைவர் உள்ளிட்ட சிலரிடம் ஆலோசனை பெறவேண்டியுள்ளதென இந்திய அணியின் முன்னாள் தலைவர்  சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை தெரிவுசெய்வதற்கான நேர்முகத் தேர்வு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. குறித்த தேர்வுக்காக கங்குலி தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நேர்முகத் தேர்வை அடுத்து, செய்தியாளர்களிடம் கங்குலி இவ்வாறு கூறியுள்ளார்.

நேற்று மாலையே புதிய தலைமை பயிற்சியாளரின் பெயர் வெளியிடப்படும் என கங்குலி தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இன்றும் சில நாட்கள் தேவைப்படுவதாக கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

தலைமைப் பயிற்சியாளர் பதவி நியமனம் தொடர்பாக எவ்வித அவசரமும் இல்லையென தெரிவித்துள்ள கங்குலி, பயிற்சியாளராக தெரிவு செய்யப்படுபவர் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடர் நடைபெறும் வரை செயற்படுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 10 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் ராஜ்புட், ரவி சாஸ்திரி, சேவாக், பைபஸ் மற்றும் டொம் மூடி ஆகியோரிடம் நேர்முகம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg