Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடியை எடப்பாடி நேரில் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

In இந்தியா
Published: 06:58 GMT, Jul 11, 2017 |
0 Comments
1224
icon_com
This post was written by : Varothayan
thiruma_13447_11192

தமிழக மீனவர் பிரச்சனைகள் தொடர்பாக, தமிழக முதல்வர் இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து தொழிலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை கடுமையானத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கிடையே, தமிழக மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம் தமிழக மீனவர்களை ஒடுக்கவதற்கே பயன்படுத்தப்படும். எனவே, இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்.

இந்தப் பிரச்சனைகள் தொடர்பாக தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன், அவரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்- என்றுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg