Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிரித்தானியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

In
Published: 08:37 GMT, Jul 11, 2017 |
0 Comments
1245
icon_com
This post was written by : Risha
trump

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வோஷிங்டனுக்கு விஜயம் செய்த பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, பிரித்தானியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், ட்ரம்பின் பிரித்தானிய வருகைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவரது பிரித்தானியாவிற்கான பயணம்   ரத்து செய்யப்பட்டது.

ட்ரம்பின் உத்தியோகப்பூர்வ விஜயத்தை எதிர்த்து கடந்த மே மாதம் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானிய மக்கள் கையெழுத்திட்டு மனுவொன்றையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே எதிா்வரும் 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபா் பிரித்தானியாவிற்கான விஜயம் மேற்கொள்வது தொடா்பில் அவரது நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg