Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டு. அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 08:06 GMT, Jul 11, 2017 | Published: 08:04 GMT, Jul 11, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
batticaloa protest (4)

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிகாரிகள் ஊழல் மோசடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி ஒரு சில குழுக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் ஆதாரமற்ற செய்திகளுக்கு கண்டனம் தெரிவித்து, மட்டக்களப்பு மாவட்ட செயலக அரச சேவையாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மாவட்ட செயலகத்திற்கு முன்னால், சுமார் 500 பேர் ஒன்றுதிரண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அரசாங்க அதிபர் மற்றும் அரச அதிகாரிகள் ஊழல் மோசடியில் ஈடுபடுவதாகவும், வாகரை மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்தை கண்டித்தும் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு, அரச சேவையாளர்கள் இதன்போது கண்டனம் வெளியிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரச ஊழியர்களின் சுயாதீன சேவை மீதான வெளியாரின் அநாவசிய தலையீட்டினை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், ‘அரசியல் அழுத்தங்களின் இடமாற்றம் நல்லாட்சிக்கு இழுக்கு’, ‘அரசியல்வாதிகளே மக்களை ஏமாற்றாதீர்கள்” போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

அத்தோடு, அரச அதிகாரிகள் மீது அபாண்டமாக குற்றஞ்சுமத்துபவர்கள் மீது ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து, மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்சிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

batticaloa protest (7) batticaloa protest (9) batticaloa protest (8) batticaloa protest (5) batticaloa protest (6) batticaloa protest (3) batticaloa protest (1) batticaloa protest (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg