Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவில் எட்டு பேரின் உயிரை காவுகொண்ட கடும் மழை

In உலகம்
Updated: 09:21 GMT, Jul 11, 2017 | Published: 09:20 GMT, Jul 11, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Risha
china

சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்துவரும் அடைமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்ததுடன், இருவர் காணாமல் போயுள்ளதாக சிவில் விவகார அமைச்சு நேற்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

இதேவேளை, மழை- வெள்ளம் காரணமாக சுமார் 11 ஆயிரம் பேர்வரை சொந்த இடங்களிலிருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இயற்கை அனர்த்தத்தினால் சுமார் ஆயிரத்து 100 வீடுகள் இடிந்ததுடன், 11 ஆயிரம் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன், அனர்த்தத்தினால் சுமார் 121 மில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு தேவையான உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகள் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுக்குமாறு உள்ளூர் அரசாங்கத்திற்கு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் மழை பெய்துவருகின்ற நிலையில், அன்றைய தினம் முதல் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg