Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் முகுருசா!

In டெனிஸ்
Updated: 09:28 GMT, Jul 11, 2017 | Published: 09:27 GMT, Jul 11, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
las-wta-finals-en-directo-garbine-muguruza-angelique-kerber

லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீராங்கனையான ஜேர்மனியின் ஏஞ்சலிக்  கேர்பரை வீழ்த்தி,  15ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கார்பின் முகுருசா (Garbine Muguruza) காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

போட்டியின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய ஏஞ்சலிக் கோ்பர் முதல் செட்டை 6-4 எனக் கைப்பறினார்.

எனினும் அவரால் அடுத்த இரு செட்களைக் கைப்பற்ற முடியாமல் போனது. முதல் செட்டை இழந்த Muguruza அடுத்த இரு செட்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். முதல் செட்டை இழந்த போதிலும், அடுத்த இரு செட்களையும், 6-4, 6-4 என தனதாக்கினார்.

இறுதியில் 4-6, 6-4, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்ற Garbine Muguruza காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg