Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொள்கைகளை மேம்படுத்த எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை கோரும் மே

In
Updated: 10:14 GMT, Jul 11, 2017 | Published: 10:14 GMT, Jul 11, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Risha
mayy

தனது கொள்கைகளை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்தாது அதனை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தவும், கொள்கைகளை மேம்படுத்தவும் பங்களிப்பு செலுத்துமாறு எதிர்க்கட்சிகளிடம் நேரடியாக கோரவுள்ளதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”கடந்த மாத நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நான் எதிர்பார்த்தது போன்று அமையாத போதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறும் பிரெக்சிட் உள்ளிட்ட முக்கியப் பொருளாதார முடிவுகளை முன்பு போலவே உறுதியுடன் எடுப்பேன்.

இந்த ஆட்சி முழுப் பதவிக்காலம் நீடிப்பது உறுதி. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த திட்டங்களை நிறைவேற்ற முன்னெப்போதும் இல்லாத உறுதியுடன் செயல்படுவேன்.

இந்நிலையில், எதிர்க்கட்சியினர் தங்களுடைய கண்மூடித்தனமான விமர்சனத்தைக் கைவிட்டு, அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg