Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கைக்காசுக் கொடுப்பனவை முடிவுறுத்தவேண்டும் : மத்யூ ரெய்லர்

In
Updated: 10:58 GMT, Jul 11, 2017 | Published: 10:48 GMT, Jul 11, 2017 |
0 Comments
1303
icon_com
This post was written by : S.K.Guna
windowcleaner

சிறிய வேலைகள் மற்றும் தற்காலிகமான வேலைகள் போன்றவற்றுக்கு கொடுக்கப்படும் காசுக் கொடுப்பனவு முறையை இல்லாதொழிக்கவேண்டும் என அரசியல் கொள்கை வகுப்பாளரும் தொழிற்கட்சியின் வோர்விக்க்ஷையர் (Warwickshire ) முன்னாள் கவுன்சிலருமான மத்யூ ரெய்லர் (Matthew Taylor ) தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை BBC ஊடகத்துக்கு தெரிவிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

ஜன்னல் கண்ணாடிகள் சுத்தப்படுத்தல் மற்றும் அலங்கரிப்பு போன்ற சிறிய வேலைகளுக்கு உடனடியாக காசுக் கொடுப்பனவு செய்யப்படுகின்றது. இந்தக் கொடுப்பனவுகள் ஆண்டுக்கு 6 பில்லியன் பவுண்ஸ்கள் பெறுமதியானவை.

எனினும் இக்கொடுப்பனவு வரி விதிப்புக்கு உட்படாததுடன் தேசிய காப்பீட்டுக்கும் (National Insurance) எந்தவிதமான பங்களிப்பும் கிடைப்பதில்லை. இந்த செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மையானதல்ல.

எனவே கைக்காசுக் கொடுப்பனவு முறை முடிவுறுத்தவேண்டும் என்று குறிப்பிட்ட மத்யூ ரெய்லர் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் குறைந்த வேதன சிக்கலுக்குள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg