Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்து

In உலகம்
Updated: 11:28 GMT, Jul 11, 2017 | Published: 11:28 GMT, Jul 11, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Risha
pak oppo

நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமாயின் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் குர்ஷித் ஷாஹ் வலியுறுத்தியுள்ளார்.

பனாமா பேப்பர்ஸ் வாயிலாக கசிந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் குற்றச்சாட்டு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அவரது பதவி விலகல் குறித்து வலியுறுத்தி வருகின்றன.

இதேவேளை, நவாஸ் ஷெரீப்பின் பதவி விலகல் அரசின் அமைப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நவாஸ் ஷெரீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கான தார்மீக, அரசியல் மற்றும் சட்ட அதிகாரத்தை இழந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஈ-இன்சாப் கட்சியின் தலைவர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg