Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி ஏகமனதாக தெரிவு

In இந்தியா
Published: 05:19 GMT, Jul 12, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Elakkiya

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனும் மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தியின் பெயரை திருணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஓ பிரையன் முன்மொழிய பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் சதீஷ் மிஸ்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சுரி ஆகியோர் வழிமொழிந்தனர். இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியாக பணியாற்றும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg