Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராஜீவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனின் பரோல் குறித்து பரிசீலனை செய்ய உத்தரவு

In இந்தியா
Updated: 08:06 GMT, Jul 12, 2017 | Published: 06:03 GMT, Jul 12, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : Elakkiya
coart

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரனின் பரோல் விடுமுறை குறித்து பரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுமுறை வழங்கக் கோரிய மனு அவரது தாயார் ராஜேஸ்வரியால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மனுவை விசாரித்த நீதிபதிகள் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ரவிச்சந்திரனின் பரோல் கோரிக்கையை பரிசீலனை செய்து இரண்டு வாரங்களில் முடிவை அறிவிக்க வேண்டும் என உள்துறை செயலருக்கும், பிரதான மனு தொடர்பாக எதிர்வரும் மூன்று வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரனின் தாயார் தாக்கல் செய்திருந்த மனுவில், தனது மகன் சாதாரண விடுப்பில் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதால் அவரை ஒருமாதம் பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் இது குறித்து மதுரை சிறை கண்காணிப்பாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கையளித்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg