Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டார் மீதான தடைகள் தொடர்ந்து நீடிக்கும்: சவுதி

In உலகம்
Updated: 07:11 GMT, Jul 12, 2017 | Published: 07:11 GMT, Jul 12, 2017 |
0 Comments
2283
icon_com
This post was written by : Risha
sau

பயங்கரவாதத்தை சமாளிப்பது தொடர்பில் அமெரிக்காவிற்கும் கட்டாருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் போதுமானதொன்றாக அமையாது என்றும் கட்டார் மீதான தடைகள் தொடர்ந்து நீடிக்கும் எனவும் சவுதி அரேபியாவும் அதன் கூட்டணியும் அறிவித்துள்ளது.

அமெரிக்கா- கட்டார் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சவுதி அரேபியா வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டார் அதிகாரிகளை நம்ப முடியாது என்றும் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் கவனமாக கண்காணிக்கப்படும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனின் கட்டார் விஜயத்தின் போது நேற்று (செவ்வாய்க்கிழமை) இரு தரப்பிற்கும் இடையே குறித்த விடயம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதன் மூலம் கட்டார் மீது தடைகளை விதித்த நாடுகளை மீண்டும் தம்முடன் இணைய அழைப்பு விடுப்பதாக கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg