Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அப்பாவோடு என்னை ஒப்பிடாதீர்கள் -அதர்வா முரளி

In சினிமா
Published: 08:41 GMT, Jul 12, 2017 |
0 Comments
1059
icon_com
This post was written by : Kemasiya
01-1451637323-atharva-12-600

அப்பாவின் படங்களை பார்த்து நான் சினிமாவுக்கு வரவில்லை. அப்பா எனக்கு கூறுவதும் தன் படங்களை பார்க்க வேண்டாம் என்று தான். என்னால் அப்பா நடித்த படங்களில் நடிக்க முடியாது. ஆகையினால் அப்பாவோடு என்னை ஒப்பிடாதீர்கள் என்று  முரளியின் மகன் அதர்வா தெரிவித்துள்ளார்.

அதர்வா நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’. இப்படத்தின் ஊடக சந்திப்பிலேயே அதர்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த படத்தில் 4 நாயகிகளுடன் சேர்ந்து நடித்துள்ளேன். நான்கு பேருடனும் சந்தோசமாக தான் நடித்துள்ளேன்.எனக்கு பெண்கள் அதிகளவு இரசிகைகளாக இருப்பது சந்தோசம் என தெரிவித்துள்ள அதர்வா, எந்தப்படங்களையும் தேர்வு செய்வது தொடர்பில் ஆலோசனை வழங்க எனக்கு யாரும் இல்லை. ஆனால் எனது படங்கள் ஒவ்வொன்றும் புதுமையானவை என நான் நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg