Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரட்டை இலை சின்ன விவகாரம்: சுகேஷ் சந்திரசேகருக்கு விளக்கமறியல் நீடிப்பு

In இந்தியா
Updated: 09:06 GMT, Jul 12, 2017 | Published: 09:05 GMT, Jul 12, 2017 |
0 Comments
1071
icon_com
This post was written by : Elakkiya
sukesh-chandrasekar6566-27-1498550092

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) திஸ் ஹசாரி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் இரண்டு அணிகளாக பிரிந்த அ.தி.மு.க. இரட்டை இலைச் சின்னத்திற்கு போட்டியிட்ட நிலையில் குறித்த சின்னத்தை தேர்தல் ஆணையகம் முடக்கியது. இந்நிலையில், சின்னத்திற்கான உரிமைப் பிரமாணப் பத்திரங்கள் இரு அணிகள் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இரட்டை இலைச்சின்னத்தை பெற்றுக் கொள்வதற்காக சுகேஷ் சந்திரசேகருக்கு, டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதனடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg