Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் செயற்பாட்டிற்கு ரஷ்யா எச்சரிக்கை!

In ஐரோப்பா
Updated: 09:52 GMT, Jul 12, 2017 | Published: 09:51 GMT, Jul 12, 2017 |
0 Comments
1223
icon_com
This post was written by : Risha
sergei

அமெரிக்கா, ஒபாமா நிர்வாக்தின் கீழ் காணப்பட்டபோது முடக்கி வைக்கப்பட்ட தங்கள் சொத்துக்களை திரும்ப ஒப்படைக்காவிட்டால் தக்க பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் தெரிவித்த போதிலும், என்ன நடவடிக்கை என்பது தொடர்பில் குறிப்பிடவில்லை.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக 30 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றி, அரசின் சொத்துக்களை பறிமுதல் செய்ய மொஸ்கோ தயாராகவுள்ளதாக ஏற்கனவே ரஷ்ய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 35 ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய ஒபாமா நிர்வாகம், ரஷ்யாவின் இரண்டு புலனாய்வு அமைப்புக்களையும் மூடியது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற குற்றச்சாட்டுகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg