Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனசாட்சிக்கு இணங்க அணித்தலைவர் பதவியில் இருந்து விலகினேன்: மெத்தியூஸ் உருக்கம்

In கிாிக்கட்
Updated: 10:12 GMT, Jul 12, 2017 | Published: 10:12 GMT, Jul 12, 2017 |
0 Comments
2062
This post was written by : Anojkiyan

மனசாட்சிக்கு இணங்கவே தான் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகியதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“அண்மை காலமாக அணி என்ற வகையில் எம்மால் சிறந்த பெறுபேறுகளை பெற முடியாமல் போனது இதனை தலைவர் என்ற வகையில் ஏற்றுக் கொள்கின்றேன். எனவே இதுவே தலைமை பொறுப்பிலிருந்து விலகி, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க உரிய தருணம் என நான் கருதினேன்.

இதன் மூலம் புதிய தலைவர் ஒருவருக்கு 2019ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண தொடருக்கு அணியை தயார்படுத்த சந்தர்ப்பமாக அமையும். அண்மைகாலமாக இடம்பெற்ற சில சம்பவங்களும் அணியின் தோல்வியில் தாக்கம் செலுத்துகின்றது. மொத்தத்தில் இன்றுவரை எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg