Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வடக்கு மாகாண போக்குவரத்துத் துறையின் தலைவிதியை தீர்மானிக்க 18இல் கூட்டம்!

In
Published: 10:40 GMT, Jul 12, 2017 |
0 Comments
1037
This post was written by : Surenth
Vavuniya Meeting 05

வடக்கு மாகாண போக்குவரத்துத் துறையின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் என வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இ.போ.ச, மற்றும்  தனியார் பேரூந்து சாரதிகள், நடத்துனர்களுடனான கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவையினை வழங்குவதற்கு வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கால அவகாசம் வழங்கப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல், வடமாகாண போக்குவரத்துத்துறையின் தலைவிதியை தீர்மானிக்கும் கலந்துரையாடலாக அமையும்.

வடக்கு மாகாண போக்குவரத்து தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றது. இதைத்தீர்க்கும் முகமாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்டத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, சேவை வழங்குநர்களின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட இரு தரப்பினர்களும் சமூகமளித்திருந்தார்கள். தனியார் துறையின் ஒன்றியம், ஜந்து மாவட்டத்தலைவர்கள், வீதி முகாமையாளர்கள், தேசிய போக்குவரத்தின் ஆணைக்குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர், மாகாண சபை உறுப்பினர், பணிப்பாளர்கள் என உயர் மட்டத்திலிருந்து கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டமானது வடக்கு மாகாணத்தின் போக்குவரத்து தொடர்பாக இருக்கின்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடியதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Vavuniya Meeting 01 Vavuniya Meeting 02 Vavuniya Meeting 03 Vavuniya Meeting 04 Vavuniya Meeting 06 Vavuniya Meeting 07 Vavuniya Meeting 08 Vavuniya Meeting 09

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner