Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய வரி முறைமை முதலீட்டாளர்களை ஈர்க்கும்- மங்கள சமரவீர

In வணிகம்
Updated: 12:22 GMT, Jul 12, 2017 | Published: 12:21 GMT, Jul 12, 2017 |
0 Comments
1085
icon_com
This post was written by : Kemasiya
mangala-samaraweera

உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய வரி முறமை முதலீட்டை இலகுபடுத்துவதோடு, முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் அமையுமென நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போதைய வரி முறமை சிக்கலானது மற்றும் முதலீட்டாளர்கள் புரிந்து கொள்வதற்கு கடினமானதும். ஆகையினால் புதிய வரி முறமைக்கான மசோதா முதலீட்டினை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (ஜூலை10) அமைச்சர் நிதி அமைச்சில் உள்நாட்டு வருவாய் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து பேசிய பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் பொழுது தொழிற்சங்க பயிற்சிகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் குறைவாக உள்ளமை தொடர்பில் உள்நாட்டு வருவாய் திணைக்கள அதிகாரிகள் முன்வைத்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டில் இருந்து வரி வருவாய் குறைந்துள்ள போதிலும் குறித்த புதிய வரித்திட்ட மசோதாவினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரச வரி வருவாயை அதிகரிக்க முடியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg