Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் இளைஞர்கள் கடத்தல்: கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கைது

In இலங்கை
Published: 03:50 GMT, Jul 13, 2017 |
0 Comments
1223
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
CID

கொழும்பு வெள்ளவத்தை மற்றும் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கப்டன் டி.கே.பி.தஸநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் தொடர்ச்சியாக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை வெளிநாடு செல்வதற்கு நேற்றைய தினம் முன்னாள் கடற்படை பேச்சாளர் நீதிமன்றில் அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதோடு, அவரை கைதுசெய்வதற்கான அனுமதியையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கோரினர்.

இந்நிலையில், கடற்படையின் முன்னாள் பேச்சாளரை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதி அவசியமில்லையென நீதவான் லங்கா ஜயரத்ன தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்தே கடற்படையின் பேச்சாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள், கடற்படையினரால் திருகோணமலை கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தமது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், கடற்படையின் லெப்டினன்ட் ஜெனரல் தரத்திலான அதிகாரி ஒருவர் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg