Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைடுகுரியில் தற்கொலை குண்டு தாக்குதல்: 23 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 04:39 GMT, Jul 13, 2017 | Published: 04:39 GMT, Jul 13, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Risha
maiduguri

வட-கிழக்கு நைஜீரியாவில் போர்னா மாநிலத்தின் தலைநகரான மைடுகுரியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தற்கொலை குண்டு தாக்குதல்களில் சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பொலிஸ் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த 23 பேரில் ஏழு பேர் பொதுமக்கள் எனவும், 12 பேர் கூட்டு படையணி வீரர்கள் எனவும், ஏனைய நால்வர் தற்கொலை குண்டுதாரிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தாக்குதலில் சுமார் 23 பேர்வரை படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களுள் பெரும்பாலானோர் பொகோஹராமின் ஆதிக்கம் மிகுந்த வட-கிழக்கு நைஜீரியாவில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயற்பட்டு வந்த கூட்டு படையணி வீரர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

நைஜீரியாவில் பொகோஹராம் போராளிகள் பொதுமக்களை குறிவைத்து தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில், இதுவரை ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg