Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முத்திரை பதித்த மிதாலி ராஜ்

In கிாிக்கட்
Published: 05:08 GMT, Jul 13, 2017 |
0 Comments
1249
icon_com
This post was written by : Anojkiyan
mith

மகளிர் உலகக்கிண்ண தொடரின் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியின் தலைவி மிதாலி ராஜ், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புதிய உலகசாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், மிதாலி ராஜ் 41 ஓட்டங்களை பெற்றபோது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6000 ஓட்டங்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பு இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் (5992 ஓட்டங்கள்) முதலிடத்தில் இருந்தார். அவரை தற்போது மிதாலி ராஜ் முந்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மிதாலி ராஜ், 69 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg