Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத வர்த்தகம்: 19 பேர் மீது வழக்குத் தாக்கல்

In இலங்கை
Published: 05:20 GMT, Jul 13, 2017 |
0 Comments
1226
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 110 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பட்டுள்ளதோடு, 19 வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (புதன்கிழமை) இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.

நிறை குறைவாக பொதியிடப்பட்ட அரிசியை விற்பனை செய்தல், சட்டவிரோதமான முறையில் முத்திரையிடப்படாத நிறுத்தல் கருவிகளைக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடல், போலியான கருவிகளைப் பயன்படுத்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்கள்மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி, ரிதிதென்ன, ஜெயந்தியாய, நாவலடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு நகரம் ஆகிய இடங்களில் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg