Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விம்பிள்டன் டென்னிஸ்: கெர்ரியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார் முர்ரே

In டெனிஸ்
Published: 05:42 GMT, Jul 13, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Anojkiyan

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஓன் வீரரான ஆண்டி முர்ரே, அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், நடப்பு சம்பியனான பிரித்தானியாவின் ஆண்டி முர்ரே, அமெரிக்காவின் 24ஆம் தரநிலை வீரரான சேம் கெர்ரியை எதிர்கொண்டார்.

அனுபவ வீரரான முர்ரே இப்போட்டியில் எளிதாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இறுதியில் 3-6, 6-4, 6-7 (4-7), 6-1, 6-1 என்ற செட்கணக்கில் முர்ரேக்கு அதிர்ச்சி அளித்து கெர்ரி வெற்றிபெற்றார்.

இதன்மூலம், 2009ஆம் ஆண்டு நடந்த விம்பிள்டன் தொடரில் ஆண்டிரோடிக் அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு, கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை கெர்ரி பெற்றுள்ளார்.

அத்தோடு, ஆண்டி முர்ரே இப்போட்டியில் தோல்வி அடைந்திருப்பதால், உலகத் தரவரிசையில் அவரை நோவக் ஜோகோவிச் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg