Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீட்டுத்திட்ட பயனாளிகள் எதிர்நோக்கும் இன்னல்கள்

In இலங்கை
Updated: 05:25 GMT, Jul 13, 2017 | Published: 05:22 GMT, Jul 13, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
sand-1

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ள போதும், வீட்டுத்திட்டத்திற்கு தேவையான மணலை பெற்றுக்கொள்ள வீட்டுத்திட்ட பயனாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பயனாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் வீட்டுத்திட்டத்திற்கான முதற்கட்ட பணிகளை தற்போது ஆம்பித்துள்ளனர். இந்நிலையில், சுமார் 28 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஒரு டிப்பர் மணலை பெற்றுக்கொள்ள 35 ஆயிரம் ரூபாய் முதல் 42 ஆயிரம் ரூபாய் வரை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மணலுக்கான அனுமதிப்பத்திரம் ஒரு நாளைக்கு செல்லபடியாகும் வகையில் மன்னார் பிரதேசச் செயலகத்தினால் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படுகின்ற போதும், தூர இடங்களில் இருந்து மன்னாருக்கு மணல் கொண்டுவரப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொண்டுள்ள மக்கள், உரிய முறையில் மணலை பெற்றுக்கொள்ள மன்னார் பிரதேசச் செயலாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் இருந்து யாழ். மாவட்டம் உட்பட பல்வேறு இடங்களுக்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg